Monday, August 20, 2012

Oh Baby girl ஹேய் பெண்ணே - மாலை பொழுதின் மயக்கத்திலே




படம்: மாலை பொழுதின் மயக்கத்திலே
பாடியவர்கள்: ஹேமசந்திரா, அச்சு
வசனம்: ரோகிணி
இசை: அச்சு



ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே

அட திரும்பியும் வந்தாய்
அடி ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் coffee mug-லே காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சில் பூக்கள் என்ன‌..
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் ந‌னைவதென்ன..

நேற்று நடந்ததும் நாளை மறப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பதுங்கி குளிர்வதென்ன

என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே ..
என் உயிரே .. என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே

மக்காயாலா மக்காயாலா பாடல் வரிகள் - நான் (Makkayala lyrics)




படம்: நான்
பாடியவர்கள்: ஷக்தி ஸ்ரீ (Shakthi Shree), Krishan, Maheson, Mark
வசனம்: பிரியன்
இசை: விஜய் ஆண்டனி

மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
யெலா யெலா யெலா...

இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இங்கு தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை....
தனிமயிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீறல் தப்பில்லை

மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
யெலா யெலா யெலா...

இரவினில் தூக்கம் கிடையாதே
பகல் மறை ஆட்டம் முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே..

நேற்றைய பொழுது கடந்தாச்சே
நாளைய பொழுது கனவாச்சே
இன்றைய பொழுது எங்கள் வசமாச்சே வசமாச்சே...

நண்பர்கள் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோசம்
கோடி கோடி ஆசைகள் வந்து கதவைத்தட்டும்
ஓவ் ஓவ் ஓஓ..


மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
மக்காயாலா  மக்காயாலா கயபௌவா
யெலா யெலா யெலா...


ந‌ட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேச்சுகள் தொடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே...

மனதுக்குள் எதையும் அடைக்காதே
வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே
இருப்பது ஒரு life மறுக்காதே மறக்காதே...

நண்பன் தோளில் சாய்ந்தாலேபோதும் கவலைகள் தீரும்..ஓ..வ்
எந்த துன்பம் நேர்கின்றபோதும் நட்பு தாங்கும்..
யேய் யேய் ஓவ் ஓவ்..


மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
யெலா யெலா யெலா...

இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இங்கு தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை....
தனிமயிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கென்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீறல் தப்பில்லை


மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
மக்காயாலா  மக்காயாலா கயபவ்வா
யெலா யெலா யெலா...





நாணி கோணி ராணி பாடல் வரிகள் - மாற்றான் (Naani Koni - lyrics )




படம்: மாற்றான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக் & Shreya Ghoshal 
வசனம்: விவேகா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்


நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன் (2)
மருதாணி பூத காரி உன்னை
தானே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஓர் ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தானே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீரை நீரை நீ மேகம் தாண்டி வரை
தரை தரை என் தாகம் தூண்டி நூறாய்
பாறை பாறை நன் உன்னால் ஆனேன் தேவை
கோயம் கண்கள் மேயும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும் நீளும்

நதியிலே இல்லை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உன‌தாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தோடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத காரி உன்னை
தானே என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் போகிறேன்
ஓர் ஏவல் ஏழாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

Thursday, August 9, 2012

இரட்டை கதிரே பாடல் வரிகள் - மாற்றான் (Rettai Kathire lyrics)

படம்: மாற்றான்
பாடியவர்கள்: க்ரிஷ்,  பாலாஜி(Krish, Balaji, Mili & Sharmila)
வசனம்: நா.முத்துகுமார்

இரட்டைக் கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு 
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம் பற்றிப் படரி 
தோளை நிமிர்த்து
தீரா தீரா தீரா தீரா.....

வண்ணம் வேறு வானம் வேறு இருவரின் கடல் வேறு
புயலடித்தும் வாழுதே இரு பறவை ஒரு கூட்டில் 
மெது மெதுவாய் பூக்கட்டும் இந்த பூக்கள் எதிர்க்காற்றில் 

இரட்டைக் கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு 
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம் பற்றிப் படரி தோ...ளை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு அதில் தவறாச்சு இரு உயிராச்சு உயிர் இரண்டும் வளர்ந்தாச்சு..
எனக்காச்சு எது உனக்காச்சு இனி புவியெல்லாம் அட புதுகாட்சி 
வருடம் உருண்டாச்சு..
இவன் ஒருபக்கம் அவன் மறுபக்கம் இது எதுவோ.. 
அட பூவும் தலையும் சேர்ந்த பக்கம் அதுவோ

இரட்டைக் கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு 
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம் பற்றிப் படரி தோளை நிமிர்த்து


இவன் வார்த்தை மழைத்துளியாக அவன் மறுவாரத்தை சரவெடியாக இணைந்தும் தனியாக
நதிபோல இவன் மனம் போக பெரும் புயல் போக அவன் செயல் போல யாரிங்கே இணையாக
ஹேஹே..ய்
இவன் கண்ணாடி அவன் முன்னாடி தோன்றும் உருவம் இது பிரிந்தால் கூட ஒன்றாய் நிற்கும் துருவம்


இரட்டைக் கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு 
எட்டும் வரையில் எங்கும் நீ நான் நாம் பற்றிப் படரி 
தோளை நிமிர்த்து
தீரா தீரா தீரா தீரா.....



Monday, August 6, 2012

மனசெல்லாம் மழையே- சகுனி




படம்:-சகுனி
பாடியவர்கள்:- Sonu Nigam, Saindhavi
வரிகள்:- நா.முத்துகுமார்.
இசை:- ஜி.வி.பிரகாஷ்



மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!


இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்

வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ


கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே


மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....

ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே

வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்


தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

Saturday, August 4, 2012

இதயம் இந்த இதயம் - பில்லா 2


படம்:- பில்லா 2
வரிகள்:- நா.முத்துக்குமார்
பாடியவர்:- Shweta Pandit
இசை:- யுவன்சங்கர் ராஜா


இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரி மலையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
உள்ளத்திலே அலை உண்டு ஓசை இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாரும் இல்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையே மரி இழக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

நமது நகரம் கல்கத்தா - Unni Krishnan


நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி


நேதாஜி தோன்றிய பூமி கீதாஞ்லி பாடிய வீதி பார்க்கிறேன் திகைக்கிறேன்.
ஆனந்தம் அள்ளி முழங்க பேரின்பம் சிந்துவழங்கப் பாடினேன்.
சக்கரம் காலலில் கொண்டோடும் நகரமே
இற‌க்கையில்லாமல் பறக்குமே
முடிவு இல்லாத பயணமே எந்திர வாழ்க்கை
ஒருவர்க்கும் ஒருவர்க்கும் அறிமுகம் அது இல்லை
சிரிப்புக்கும் நேரமில்லை தோழமைக்கும் யாருமில்லை
தலைந‌கர் தலை தலை தலைசுற்றுதே..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி


வங்காளப் பெண்குயில் தந்த சிங்காரக் கவிதைகள் எல்லாம் மாக‌னி சரோஜினி
பகல்போன பின்னும் இங்கே இரவெல்லாம் சூரியன் உண்டு நண்பனே
சொர்க்கம் போல் இரவில் துங்காத உலகமே இளமை தீராத நகரமே
பழைய பூங்காற்று உறவுகள் ஊக்லி கரையில்..
பலவகை இனங்களும் இங்குவந்து ஒதுங்குது
ஜ‌னங்களின் நெரிசலில் சாலைகளும் பிதுங்குது
இந்தியாவில் இது ஒரு தனி உலகம்..
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(2)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி



வந்தேமாதரமே என்னும் வங்காள கீதம் தந்தது கல்கத்தா கல்கத்தா
மாகாளி வீரம் கொண்டு போராட்டம் எல்லாம் கண்டது கல்கத்தா
தலைமகன் சத்யஜித்ரேயின் நகரமும்
எஸ்.வி.ராமன் தன் நகரமும் தேரேசா வாழ்ந்த நகரமும்
தியாகச் சிகரம் ஜண கண மண எனும் தேசியகீதமும்
இதயங்கள் மலர்ந்திடும் இலக்கியவேதமும் தந்து தந்து உயர்ந்தது இந்த நகரம்.


நமது நகரம்தான் கல்கத்தா பூமி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி
நமது நகரம்தான் கல்கத்தா பூமி
தியாகராஜன் கீர்த்தனையில் புகழ் மொழிவேன்(3)
நமது நகரம்தான் கல்கத்தா பூமி தாகூரும் பிறந்த கவிதாஞ்லி

நறுமுகையே நறுமுகையே

படம்: இருவர்.
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ.
வரிகள்: வைரமுத்து.
இசை: A.R.ரஹ்மான்

ஆண்lபெண்

நறுமுகையே நறுமுகையே, 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...

திருமகனே திருமகனே 
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே 
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா...


மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன
பாண்டிநாட‌னைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் 
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் 
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை 
இடையினில் மேகலை இருக்கவில்லை


நறுமுகையே நறுமுகையே 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா..
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா...


யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு 
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன..
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன... 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன


திருமகனே திருமகனே 
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே 
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்றப்
போய்கை ஆடுகையில் 
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா 
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றிதறள நீர்வடிய கொற்றப்
பொய்கை ஆடியவள் நீயா 




இப் பாடலில் வரும் சில செந்தமிழ்ச் சொற்களுக்கான இலகுதமிழ் விளக்கங்கள்


நறுமுகையே:- நறுமணம் மிக்க புதிய மொட்டு

நாழிகை:-  24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு

அற்றை:- அந்த

திங்கள்:- மாதம்/நாள்

தரளம்:- முத்து 

கொற்றப்பொய்கை:-அரண்மனை அந்தபுரத்தில் இருக்கும் குளம்

வெண்ணிறப் புரவி:- வெண்ணிறக் குதிரை

பசலை:- பெண்களுக்கே உரித்தான காதல் நோய்(இது வியாதி இல்லை)
               இவ்வாறு பசலை ஏற்படுகையில் பெண்ணின் உடலின் நிறம் 
               மாற்றமடையும் என கூறப்படுகிறது..
              (முக்கியகுறிப்பு:- இப்பலாம் பெண்களிடம் இதை 
             எதிர்பார்க்க வேண்டாம்,பேசியல் முகத்துக்குள் எங்கேன்னு
              பசலையை தேடிக்கண்டுபிடிக்க‌..)

மேகலை:- ஒட்டியாணம்

யாய்:- தாய்